கோவை: தமிழக அரசின் 2018ம் ஆண்டின் சுற்றுச்சூழல் மேலாண்மையின் டாக்டர் குருசாமி முதலியார் விருதினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வென்றுள்ளது.

தமிழக அரசு சுற்றுச்சூழல் இயக்குநகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுற்றுச்சூழலில் பங்காற்றியுள்ள செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வருடம் தோறும் விருதும் காசோலையும் வழங்கி வருகிறது. அதனடிப்படையில், கோவையைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு கிடைத்து இருக்கிறது. கடந்த வருடம் கிடைத்திருக்க வேண்டிய விருது கொரோனா பிரச்சினையினால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விருது கிடைத்த மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கோவை குளங்கள் அமைப்பினர், விருது கிடைத்திருப்பது பெரிய அங்கிகாரமாக கருதுகிறோம். அதனுடன் பொறுப்புகளும் அதிகமாக இருக்கிறது. இன்னும் ஊக்கத்துடன் செயல்பட இருக்கிறோம். இன்னும் மக்களுக்கு நல்ல விதத்தில் சேவை செய்ய வேண்டும். இங்குள்ள குளங்கள் எல்லாம் பசுமை நிறைந்தவையாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

கோவை குளங்கள் அமைப்பு கொரோனா காலகட்டத்திலும் சாலையோரம் உள்ள மக்களுக்கும், பசியால் வாடிய மக்களுக்கும் அவர்களால் முடிந்த அளவுக்கு அன்றாடம் உணவு அளித்து சேவை புரிந்தது குறிப்பிடத்தக்கது.