வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணை 100 அடியை எட்டியது!

கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 100 அடியை எட்டியது.

கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 100 அடியை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் அணை. பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை 165 அடி உயரம் கொண்டது.

வால்பாறையிலுள்ள சின்னகல்லார் பகுதியில் உள்ள நீரார் அணைகளில் இருந்து பெறப்படும் நீர் சுரங்க கால்வாய் மூலமாக சோலையார் அணையில் சேகரிக்கப்பட்டு மின்சாரம் தயாரிப்புக்குப்பின் பரம்பிகுளம் வழியாக ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு வந்து சேர்கிறது.

இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம் மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது. மேலும், ஒப்பந்தப்படி கேரள மாநிலத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் சோலையார் அணை முன்கூட்டியே 100 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 30 அடி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.



இன்றைய காலை நிலவரப்படி வால்பாறையில் 32 மி.மீட்டர், சின்னகல்லார் 48 மி.மீட்டர், நீரார் அணை 30 மி,மீட்டர், சோலையார் அணையில் 24 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சோலையார் அணை 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...