கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக ரூ.2 கோடியே 12 இலட்சம் மதிப்பில் 5 ரோபாடிக் 2.0 என்ற நவீன இயந்திரங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக ரூ.2 கோடியே 12 இலட்சம் மதிப்பில் 5 ரோபாடிக் 2.0 என்ற நவீன இயந்திரங்களின் செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.
பின்னர் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் விபரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக KOVAICARE APP என்ற பிரத்யேக செயலியினை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப, அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் டி.ராமதுரை முருகன் அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.