கோவை சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கள ஆய்வு செய்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கள ஆய்வு செய்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.92 ஸ்ரீ ராம்‌ நகர்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத்‌ தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.98 போத்தனூர்‌ அம்மா உணவகத்தில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று உணவின்‌ தரத்தினை சோதனை செய்தார்கள்‌. 

மேலும்‌ அங்கு வரும்‌ பொதுமக்களிடம்‌ முகக்கவசம்‌ அணிவதையும்‌, சமூக இடைவெளியினை பின்பற்றுவதன்‌ அவசியம்‌ குறித்தும்‌ அறிவுறுத்தினார்‌.



பின்னர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 கஸ்தூரி கார்டன்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம்‌ கூட்டம்‌ கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 கஸ்தூரி கார்டன்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில்‌ சேமித்து வைக்கப்படும்‌ குடிநீரில்‌ டெங்கு கொசுப்புழுக்கள்‌ உள்ளனவா என்பது குறித்து மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டார்.



நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.97 சாரதா மில்‌ ரோடு பகுதியில்‌ இன்று நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு பயனாளிகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும்‌ சத்து மாத்திரைகள்‌ வழங்கினார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...