கோவை: கோவையில் கடந்த 12ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இன்று போலீசாரின் நடவடிக்கைக்கு பின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும் பல்வேறு தளங்களில் தயக்கங்களும் எதிர்ப்புகளும் நிலவி வருகிறது.
இப்படி உயிர் பயத்தால் தங்களின் உறவுகளையே ஒதுக்கும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்ற 70 வயது முதியவர் கொரோனா தொற்றினால் கடந்த 12ம் தேதி அதிகாலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அன்றே பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும் வரவில்லை. இப்படியிருக்க மருத்துவமனை நிர்வாகம் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் இன்று உறவினர்கள் அழைத்துவரப்பட்டு உடலை பெற்றுக் கொண்டு சுகாதார விதிகளின்படி அடக்கம் செய்தனர்.