திருப்பூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முகக்கவசம் அணிந்து விலையில்லா பாடப்புத்தகங்களை வாங்கி சென்ற மாணவர்கள்!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் முலனூர் அலங்கியம் பகுதியில் வழங்கப்பட்டது.

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் முலனூர் அலங்கியம் பகுதியில் வழங்கப்பட்டது. 

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் முதல் நாளன்றே பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. அதன்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கெனவே அனைத்து பள்ளிகளையும் சென்றடைந்து விட்டன.

இந்நிலையில், முதல்கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதனையொட்டி, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.



மேலும், பாடப் புத்தகங்கள் வாங்கவரும் மாணவர்களும், பெற்றோரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்கட்டமாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் முக கவசம் அணிந்து, தங்களது பெற்றோர்களுடன் வந்து பாட புத்தகங்களை வாங்கி சென்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...