கோவை: கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட எட்டு காவலர்களுக்கு கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிக்கபட்ட அனைத்து காவலர்களும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மதுக்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தோடு தொண்டாமுத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வசித்த குடியிருப்பில் சுகாதரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள ஆறு வீடுகள் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மற்ற காவலர் குடும்பங்களுக்கும் கொரொனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட உள்ளது.