கோவை: கோவை செல்வபுரம் அருகே ஏற்கனவே கடன் பெற்ற வாகனங்களுக்கு பிட்டிங் முறையில் கடன் வழங்கிய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அபுதாஹீர் என்பவர் அபு. கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறார். இவர் மீது கடந்த 22ம் தேதி பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவரது குடோன் மற்றும் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை செய்த போது நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 இருசக்கர வாகனங்கள் 10 கார்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பிட்டிங் என்ற பெயரில் வாகனத்தின் உரிமையாளர்கள் கடன் பெற்று சரிவர திருப்பி செலுத்தாத வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தனியார் நிதி நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அவர் பிட்டிங் வாகனங்களை பல்வேறு நபர்களுக்கு விற்று உள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் அபுதாஹீர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.