கோவையில் விநாயகர் சிலை காணாமல் போன விவகாரம்; இந்து முன்னணியினர் காவல்நிலையத்தில் புகார்!

கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசமர விநாயகர் கோயிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனது தொடர்பாக இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அரசமர விநாயகர் கோயிலில் இருந்த விநாயகர் சிலை மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பாக இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக அரசமர விநாயகர் கோவில் உள்ளது. இந்த அரசமர கோவில் விநாயகர் சிலை தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கோவில் பூசாரி வழக்கம் போல சிலைக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது, விநாயகர் சிலை இருந்த இடத்தில் சிலை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதைத்தொடர்ந்து கோவில் பூசாரியும் இந்து முன்னணியினரும் விநாயகர் சிலை காணாமல் போனது தொடர்பாக கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த புகாரில் சிலை காணாமல் போனது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...