கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.17 வடவள்ளி பகுதி குருசாமி நகரில் நடைபெற்று வரும் ரூ.75 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பயிற்சி அரங்க கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.17 வடவள்ளி பகுதி குருசாமி நகரில் நடைபெற்று வரும் ரூ.75 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பயிற்சி அரங்க கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.17 வடவள்ளி பகுதியிலுள்ள சுப்ரமணிய நகரைச் சேர்ந்த தீபக் என்பவர் அலைபேசி மூலம் குடிநீர் விநியோகம் சம்பந்தமாக செய்த புகாரினை விசாரிக்க மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.18 வடவள்ளி பூங்கா நகா் பகுதியிலுள்ள பொது மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து அப்பகுதியிலுள்ள பணியாளா்களுக்கு வழங்கும் போது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.
மேலும், கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.