கோவை வடவள்ளியில் நடைபெற்று வரும்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பிலான விளையாட்டு பயிற்சி அரங்க கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.17 வடவள்ளி பகுதி குருசாமி நகரில்‌ நடைபெற்று வரும்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பிலான விளையாட்டு பயிற்சி அரங்க கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்‌.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.17 வடவள்ளி பகுதி குருசாமி நகரில்‌ நடைபெற்று வரும்‌ ரூ.75 லட்சம்‌ மதிப்பிலான விளையாட்டு பயிற்சி அரங்க கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார்‌.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.17 வடவள்ளி பகுதியிலுள்ள சுப்ரமணிய நகரைச்‌ சேர்ந்த தீபக்‌ என்பவர்‌ அலைபேசி மூலம்‌ குடிநீர் விநியோகம்‌ சம்பந்தமாக செய்த புகாரினை விசாரிக்க மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ நேரில்‌ சென்று ஆய்வு நடத்தி, உடனடியாக குடிநீர்‌ விநியோகத்தை சீராக வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.18 வடவள்ளி பூங்கா நகா்‌ பகுதியிலுள்ள பொது மக்கள்‌ மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை பிரித்து அப்பகுதியிலுள்ள பணியாளா்களுக்கு வழங்கும் போது மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்‌.



மேலும், கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, வடவள்ளி பேருந்து நிலையம்‌ அருகில்‌ செயல்பட்டு வரும்‌ உழவர் சந்தையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌, போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்‌ செல்லுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...