கோவையில் இருந்து வாளையார் வழியாக கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்!

கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு வாளையார் வழியாக கடத்தி செல்லப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கேரள போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு வாளையார் வழியாக கடத்தி செல்லப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கேரள போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது காய்கறி வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 1.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, இரு தினங்களுக்கு முன் ஆட்டோ மற்றும் சட்டை பையில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 46 கோடி ரூபாயை போதை தடுப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து வாளையார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து தமிழக எல்லையில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து பனியன் கழிவுகளை ஏற்றி சென்ற பிக் அப் வாகனம் ஒன்றை கேரள போலீசார் வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, வாகனத்தில் இருந்த மூட்டைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தபோது, பனியன் கழிவுகளுக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பாக்கெட் பாக்கெட்டாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான கோவையை சேர்ந்த ஜைன்னுலாபுதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமர் 15 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...