கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதி அடர் வனப் பகுதியாகும். இங்கு சிறுத்தை, காட்டு மாடு, மான், புலி, கருஞ்சிறுத்தை என பல்வேறுபட்ட வனவிலங்குகள் மற்றும் அரியவகை பறவைகள் வசித்து வருகின்றன.
இந்த சாலையில் ஆழியார் அணை உள்ளது. இதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை காரணமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கூட்டம் ஆழியார் அணை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

இதில் நான்கு யானை மற்றும் 2 குட்டியுடன் என ஆறு யானைகள் அணையை ஒட்டியுள்ள வால்பாறை சாலை நவமலை குடியிருப்புப் பகுதியில் சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.
இதனால் ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் உத்தரவு படி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் வராமல் இருக்க சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனசரகர் காசிலிங்கம் கூறுகையில், ஆழியார் சோதனை சாவடியில் இருந்து வால்பாறை செல்லும் பொதுமக்கள் காட்டு யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார்.