கோவை மாநகர காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலருக்கு கொரோன தொற்று; பொது மக்களுக்கு அனுமதி மறுப்பு

கோவை: கோவை மாநகர காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு காவலர்கள் தவிர்த்து வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது.

கோவை: கோவை மாநகர காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு காவலர்கள் தவிர்த்து வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை, பொருளாதார குற்றபிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இங்கு அமைச்சு பணியாளர்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் துடியலூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றபிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனைையடுத்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போலீசார் தவிர யாரும் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...