கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் அனைத்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலர்களுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், வாடு எண்.10 மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிமாக செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாகக் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.1 துடியலூர் நஞ்சப்ப கவுண்டர் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஸ்மாராட் சிட்டி திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலா்கள், பொறியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்ததாவது:-
கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறித்த காலத்திற்குள் தரமானதாக விரைந்து முடிக்கவேண்டும் எனவும், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதிகுளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம் ஆகிய குளங்களில் நடைபெற்று வருகிற வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாநகரப் பொறியாளா் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.