கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும் அனைத்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும் அனைத்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும் அனைத்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து ஆய்வுக்கூட்டம்‌ மாநகராட்சி அலுவலர்களுடன்‌ நடைபெற்றது.



கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, வாடு எண்‌.10 மேட்டுப்பாளையம்‌ பேருந்து நிலைய வளாகத்தில்‌ தற்காலிமாக செயல்பட்டு வரும்‌ எம்‌.ஜி.ஆர்‌ மார்க்கெட்டில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு, வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணியுமாறும்‌, சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்‌.



கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாகக் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.1 துடியலூர் நஞ்சப்ப கவுண்டர்‌ வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத்‌ தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, தடாகம்‌ சாலை அரசினர்‌ தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ உழவர் சந்தையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்தும்‌, போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்‌ செல்லுமாறு அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ ஸ்மாராட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ வளர்ச்சிப் பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து அலுவலா்கள்‌, பொறியாளர்களுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகரம்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும்‌ குறித்த காலத்திற்குள்‌ தரமானதாக விரைந்து முடிக்கவேண்டும்‌ எனவும்‌, கிருஷ்ணம்பதி குளம்‌, செல்வம்பதிகுளம்‌, செல்வசிந்தாமணி குளம்‌, பெரியகுளம்‌ ஆகிய குளங்களில்‌ நடைபெற்று வருகிற வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளா்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ சரவணக்குமார் மற்றும்‌ அதிகாரிகள்‌, பொறியாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...