வால்பாறைக்கு வனவிலங்குகளை படம் பிடிக்க வந்தவர்கள் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைப்பு!

கோவை: வால்பாறைக்கு வனவிலங்குகளை படம் பிடிக்க வந்தவர்கள் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கோவை: வால்பாறைக்கு வனவிலங்குகளை படம் பிடிக்க வந்தவர்கள் சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பப்பட்டனர். 



கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவற்றை படம் பிடிக்க ஏராளமான வன விலங்கு ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக வால்பாறை பகுதிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அட்டகட்டி பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து வன விலங்கு உயிரின ஆர்வலர்கள் வால்பாறை பகுதியில் வனவிலங்குகளை படம் பிடிக்க வந்துள்ளனர். 

அப்போது, அவர்களை அட்டகட்டி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். வனவிலங்குகளை படமெடுக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அக்கடிதம் கொரோனா தொற்று தடை காலத்திற்கு முன் பெறப்பட்டது என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அக்குழுவினரை வால்பாறை பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...