கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். மேலும், கோவையில் 931 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் நாளுக்கு நாள் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முகவரி மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்த முழு விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் தற்போது வரை வழங்கப்படுவதில்லை.
ஆகவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கோவை மாவட்ட பொதுமக்கள் அறிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, நீங்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக 95858-55577 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
Update @9:15 PM - The district administration has given area wise breakup of the cases listed today in the state bulletin. Out of the 117 cases, 82 cases are cluster cases with more than one case in each area. 35 cases are from other areas with one case each.
1. Selvapuram – 20 cases
2. Ukkadam KG Street - 10 cases
3. AD colony, MuthaliPalayam, Annur Mettupalayam – 7 cases
4. Ganapathy Managar - 6 cases
5. Sullivan Street - 6 cases
6. Elahi Nagar, second Street, Saramedu - 5 cases
7. Kempatty colony, 7th Street, Town Hall – 5 cases
8. Jothipuram - 4 cases
9. Fifth Street, Kurrathul layout, ittery, Kurichi Pirivu – 4 cases
10. Vinayapuram, Saravanampatti - 3 cases
11. Sakkarai Chettiar Street, Uppilipalayam - 2 cases
12. Nehru ji Street, Semmedu - 2 cases
13. Lakshmi Nagar, Thanneer Pandhal Peelamedu - 2 cases
14. Kandasamy Nagar, Press colony, Veerapandi – two cases
15. Karuppiah Street – 2 cases
16. Telengupalayam –2 cases
17. Other areas with individual cases - 35 cases
18. Other HUD cases - 2 cases