கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர்!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். 



கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் வனப்பகுதிக்கு அருகே விவசாய நிலத்தில் ராஜ நாகம் இருப்பதாக தகவல் வனத்துறைக்கு கிடைத்துள்ளது. 

அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினரும், பாம்பு மீட்பவரும் 15 அடி உள்ள ராஜ நாகத்தை மீட்டு பரிசோதனை நடத்திய பின் சிறுவாணி அடர் வனப்பகுதியில் விட்டனர்.



மேலும், வனத்துறையினர் கூறுகையில், பிடிக்கப்பட்ட பாம்பு முன்னதாகவே இருமுறை பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது. ஒரு வேளை பாம்புகள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலத்திற்குள் வந்தால் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாம்புகள் மூலமாக மனிதர்களுக்கும், மனிதர்கள் மூலமாக பாம்புகளுக்கு எவ்வித தீங்கு நேரிடாமல் தடுக்கலாம் என்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...