ஆவாரம்பாளையம் மேம்பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவு: செம்படம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு

கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால் அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் மூடப்படும் போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. 



இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. தற்போது, இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த மேம்பாலம் 550 மீட்டர் நீளம். 12 மீ அகலம் கொண்டது.

இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த மேம்பால பணிகள் சுமார் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.  இனி, மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை மட்டும் அமைக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது."

இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...