கோவை: கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே கிராசிங் பகுதியில் நடந்து வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால் அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் மூடப்படும் போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. தற்போது, இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த மேம்பாலம் 550 மீட்டர் நீளம். 12 மீ அகலம் கொண்டது.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த மேம்பால பணிகள் சுமார் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இனி, மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை மட்டும் அமைக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது."
இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.