கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என 200 படுக்கை வசதிகள் கொண்ட தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனை தொடங்கி வைத்து பார்வையிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி.
பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று ஏற்பட்ட நோய்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் என்னென்ன தேவை உள்ளது என்பது குறித்து அங்கு பணியாற்றும் மருத்துவ குழுவினருடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, வைரஸ் தொற்று நோய்களுக்கு என பிரத்தியேக வழியை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அந்தப் பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் நுழைய வண்ணம் முறையாக பணியாட்களை வைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.
மேலும், அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் இதற்கு என்ன வசதிகள் தேவை என்றாலும் உடனடியாக செய்திட மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.