வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..! போலீசார் விசாரணை

கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு தொழிலாளியாக பணியாற்றுபவர் சுரேஷ் (30). இவருக்கு வனிதா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று காலை மனைவி வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் சுரேஷ் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, வனிதா மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டி திறக்காத காரணத்தினால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து பார்த்த போது, சமையலறையில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 



இதையடுத்து, வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் தலைமை காவலர் முஜீப் ஆகியோர் சுரேஷின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...