கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு தொழிலாளியாக பணியாற்றுபவர் சுரேஷ் (30). இவருக்கு வனிதா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை மனைவி வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் சுரேஷ் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, வனிதா மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டி திறக்காத காரணத்தினால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை திறந்து பார்த்த போது, சமையலறையில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் தலைமை காவலர் முஜீப் ஆகியோர் சுரேஷின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.