மேட்டுப்பாளையம் அருகே ஒரு மாதமாக குடியிருப்புகளில் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானை..! பொதுமக்கள் அச்சம்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை ஆண் காட்டுயானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் மலை அடிவார கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை ஆண் காட்டுயானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துரை, குரும்பனூர், தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் நுழையும் இந்த ஒற்றை காட்டுயானை விவசாய பயிர்களான வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக இந்த யானை உதகை சாலையில் உள்ள ஓடந்துரை பகுதியில் அதிகமாக நடமாடி வருகிறது என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த காட்டுயானை மேட்டுப்பாளையம் குன்னூர் பிரதான சாலையில் உள்ள ஏ.கே.எஸ் காலனி என்ற இடத்தில் குடியிருப்புக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து பல மணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடிவரும் இந்த காட்டுயானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...