கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.80, இடையர் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அங்குள்ள பொதுமக்களிடம் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், அனைவரும் சுயக்கட்டுப்பாடுடன் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியினை பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்கிற்குட்பட்ட இராஜவீதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி மருந்துகளின் தரம் குறித்து பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் ஆய்வு செய்து, அதன் மாதிரியினை தரப்பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் லாரி பேட்டையில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் கள ஆய்வு செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கே.கே.புதூர் ஆரம்ப பள்ளி வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வெளியூர்,
வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாத நபர்கள் குறித்தும், வயதானவர்கள், இருதய நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களின் விபரங்கள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களை கண்டறிதல், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் சுயவிவரங்கள் போன்ற தரவுகளை சேகரிக்கும் களப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், களப்பணியின்போது போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்தும், முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்து மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தகவல்களை சேகரிக்கும் பணிகளில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும். அந்தந்த பகுதிகளிலுள்ள காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கு பல்ஸ் மீட்டர் மற்றும் தெர்மல் ஸ்கேன் மூலமாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 1077, 0422-2302323, 9750554321, என தெரிவித்தார்.