கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பரிசோதனை முடியும் வரை சிகிச்சையளிக்க இரண்டு சிறப்பு வார்டுகள்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், கொரோனா தொற்று உருவானதிலிருந்து நோயாளிகளின் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இங்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி தினமும் கோவை அரசு மருத்துவமனையில் 1500 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும், காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதித்து பரிசோதனை முடிவு வரும் வரை இன்ஃப்ளூயன்சா லைக் இல்னஸ் என்ற (ஐஎல்ஐ) வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதேபோல, மூச்சுத் திணறலுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க Severe Acute Respiratory Infection என்ற (SARI) வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பரிசோதனை முடிவு வரும்வரை சிகிச்சை பெறுகின்றனர். முடிவில் பாசிட்டிவ் என்று வந்தால் உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐஎல்ஐ வார்டில் 8 முதல் 10 பேரும், SARI வார்டில் ஐந்து முதல் எட்டு பேரும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...