கோவை மாநகராட்சி வார்டுகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் அமைக்க பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் எனப்படும் சிறு மறுசுழற்சி மையங்கள் மூலம் அங்கு குவியும் குப்பைகள், விரைவில் குறைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் எனப்படும் சிறு மறுசுழற்சி மையங்கள் மூலம் அங்கு குவியும் குப்பைகள், விரைவில் குறைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்தும் வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 முதல் 900 மெட்ரிக் டன் குப்பைகள் வருகின்றன. இதில் மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர், அதாவது சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில் 59 மையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டுவிட்டன, விரைவில் செயல்பட துவக்க உள்ளன.

இதற்காக குப்பைகளை வீடு வீடாக மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க 102 டாட்டா ஏஸ் வாகனங்கள் முடிவு செய்யப்பட்டு அதில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அதில் பச்சை நிற வண்டிகள் தினமும் வந்து மக்கும் குப்பைகளான - காய்கறி கழிவுகள், சாப்பாட்டு கழிவுகள் போன்றவற்றை பெற்று செல்லும். நீல நிற வண்டிகள் வாரம் இருமுறை மட்டுமே வந்து மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள் போன்றவற்றை பெற்று செல்லும்.

இந்த மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர்களுக்கு செல்லும் இந்த வண்டிகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறு மறு சுழற்சி மையங்கள் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...