கோவை: கோவையில் ரத்தினபுரி காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பாமக சார்பில் ரூ.5000 வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் ரத்தினபுரி காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பாமக சார்பில் ரூ.5000 வழங்கப்பட்டது.
பின்னர் பாமகவினர் பேசுகையில், சாத்தான்குளத்தில் நடந்தது போல் ஒவ்வொரு ஊரிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அப்பாவி மக்களை மிருகத்தனமாக அடிக்கும் காவலர்களை தடுக்க கூடிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும். "ஒவ்வொரு உயிரும் முக்கியம்" என்ற எண்ணம் வர வேண்டும்.
இதை வலியுறுத்தும் வகையில் "Take a knee" முட்டி இட்டு எங்களின் அமைதியான எதிர்ப்பை தெரிவித்தோம்.
அதேபோல, சிறுவனுக்கு புதிய துணியும், புத்தகங்களும், ரூ.5000 பாமக சார்பாக வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், இனி புதிய தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு பாமக துணை நிற்கும் என்று கூறினர்.