கோவை: அரசு ஊழியர்கள் வசதிக்காக கோவை மண்டலத்தில் 35 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகம் முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கோவையில் அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படவில்லை.
இதனிடையே, போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் ஆகியவை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய கோட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் வசதிக்காக 35 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், டவுன் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 27 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல் ஊட்டிக்கு 4, திருப்பூருக்கு 4 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார்.