கொரோனா தொற்று எதிரொலி: கோவையில் செயல்படும் தங்க பட்டறைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

கோவை: கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம், செட்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம் பகுதியில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவை செல்வபுரத்தில் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்ப்பட்ட குடியிருப்பு வாசிகளை பரிசோதனை செய்ததில், நூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோவை செல்வபுரம், செட்டி வீதி, தெலுங்கு பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தங்க பட்டறைகளை நாளை முதல் மூட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கோவை மாவட்டத்தில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் தங்க பட்டறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தங்கம் உள்ளிட்ட பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள 2 நாட்கள் அவகாசம் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...