கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் உலாவரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் - வனப்பகுதிகளுக்குள் விரட்ட கோரிக்கை!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. குறிப்பாக, தற்போது காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்துடனே வெளியே சென்று வரும் நிலை உள்ளது.

அதேபோல, தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் சேதம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்கு செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர் சேதமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இவற்றை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...