கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலார் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலாகள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படையினர் தினசரி களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பறக்கும் படை குழுவினர்கள் மூலம்மாநகராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் -- மேற்கு மண்டலத்தில் 214 கடைகளில் ரூ.26,100/-ம், கிழக்கு மண்டலத்தில் 54 கடைகளில் ரூ.5,500/-ம், மத்திய மண்டலத்தில் 55 கடைகளில் ரூ.15,800/-ம், வடக்கு மண்டலத்தில் 138 கடைகளில் ரூ.19,450/-ம், தெற்கு மண்டலத்தில் 164 கடைகளில் ரூ.11,700/-ம், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாமலும், வருகைப் பதிவேடு பேணப்படாமலும், கிருமிநாசினி மருந்துகள் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளியினை பின்பற்றாமலும் இயங்கிய மேலே குறிப்பிட்ட 625 கடைகளுக்கு பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் மொத்தம் ரூ.78,550/- அபராதம் விதித்தனர்.