கோவையில் முககவசம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்தாத 625 கடைகளுக்கு அபராதம் - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களிலும்‌ தனித்தனியே கண்காணிப்பு அலுவலாகள்‌ நியமிக்கப்பட்டு பொதுமக்கள்‌ கூடும்‌ இடங்கள்‌ மற்றும்‌ அனைத்து வகையான கடைகளில்‌ பறக்கும்‌ படையினர்‌ தினசரி களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலார்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவின்படி மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களிலும்‌ தனித்தனியே கண்காணிப்பு அலுவலாகள்‌ நியமிக்கப்பட்டு பொதுமக்கள்‌ கூடும்‌ இடங்கள்‌ மற்றும்‌ அனைத்து வகையான கடைகளில்‌ பறக்கும்‌ படையினர்‌ தினசரி களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று, மாநகராட்சியின்‌ ஐந்து மண்டலங்களிலும்‌ பறக்கும்‌ படை குழுவினர்கள்‌ மூலம்‌மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்‌ -- மேற்கு மண்டலத்தில்‌ 214 கடைகளில்‌ ரூ.26,100/-ம்‌, கிழக்கு மண்டலத்தில்‌ 54 கடைகளில்‌ ரூ.5,500/-ம்‌, மத்திய மண்டலத்தில்‌ 55 கடைகளில்‌ ரூ.15,800/-ம்‌, வடக்கு மண்டலத்தில்‌ 138 கடைகளில்‌ ரூ.19,450/-ம்‌, தெற்கு மண்டலத்தில்‌ 164 கடைகளில்‌ ரூ.11,700/-ம்‌, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாமலும்‌, வருகைப்‌ பதிவேடு பேணப்படாமலும்‌, கிருமிநாசினி மருந்துகள்‌ பயன்படுத்தாமலும்‌, சமூக இடைவெளியினை பின்பற்றாமலும்‌ இயங்கிய மேலே குறிப்பிட்ட 625 கடைகளுக்கு பறக்கும்‌ படையை சேர்ந்த அதிகாரிகள் மொத்தம்‌ ரூ.78,550/- அபராதம்‌ விதித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...