கோவை: கோவையில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் சட்டையில் கண்காணிப்பு கேமராவுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் வாகன தணிக்கையின் போது போக்குவரத்துக் காவலர்கள் வரம்பு மீறுவதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் சிலர் தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனால் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களையும், எதிரில் உள்ள நபர்களையும் கண்காணிக்கும் வகையில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதை போல் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களின் சட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க முடியும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாத்தான்குளத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் காவலர்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்ற மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இது நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.