ஜெயலலிதா உடல்நலம் விசாரிக்க சென்னை வந்த அருண் ஜேட்லி மற்றும் அமித் ஷா

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு வெளிநாட்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு புதனன்று (இன்று) வருகைத் தந்தனர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர். இதற்காக அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.



இதனிடையே, அப்பல்லோவில் 20 நிமிடம் இருந்த அருண் ஜெட்லியும், அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...