பிளாஸ்டிக் இல்லா’ வால்பாறை மலைப்பகுதி : தொடர்ந்து 49-வது வாரமாக தூய்மைப்பணியில் தன்னார்வலர்கள்

கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 49-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 49-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.



ஆழியாறு - வால்பாறைமலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, வனவிலங்குகளுக்கு தூய்மையான வாழ்விடத்தை அமைத்து தரும் நோக்கில் ‘டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்’ என்ற குழு வாரத்தின் இறுதி நாளில் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, தற்போது 49-வது வாரமாக நடைபெற்றது.



ஆழியாறில் இருந்து வால்பாறை மலைப்பகுதியின் 2-வது கொண்டை ஊசி வளைவு வரை, வனத்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியில் 2 பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. செங்குத்தான சரிவுகளில் தன்னார்வலர்கள் கயிறு கட்டி இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அடுத்த வாரமும் இதேப் பகுதியில் தூய்மை பணியை தொடர தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். 



இந்தத் தூய்மைப் பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 80723 79927 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...