அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற மரநடுகை விழாவும் நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையம் சார்பில், அறிவியல் ஒளி அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், மரநடுகை விழாவும் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பேராசிரியர் முனைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அறிவியல் அலுவலர் சுடலை வரவேற்றார்.

அறிவியல் ஒளி மாத இதழின் ஆசிரியர் சிதம்பரம் வாழ்த்துரை வழங்கினார். அறிவியல் எழுத்தாளரும், அறிவியல் விழிப்புணர்வு பணிக்காக தேசிய விருது பெற்றவருமான பேராசிரியர் மோகன் சுந்தரராஜன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...