கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 37 வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
கோவை: சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 37 வது வாக்குச்சாவடி மையத்தில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

சூலூர் தொகுதி எலச்சிபாளையம் பகுதியில் 37-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 10 மணி அளவில் 185 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

பின்னர், இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இதேபோல, சுல்தான்பேட்டையில் உள்ள 261-வது வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது.