நீலகிரி : தொடர் விடுமுறையினால் கோத்தகிரி நேரு பூங்காவில் பூத்துள்ள அழகிய மலர்களை, அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோத்தகிரி நேரு பூங்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, கோடை சீசனுக்காக பூங்கா தயார்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, பல வண்ணங்களில் மலர்ந்துள்ள ரோஜா மற்றும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்துள்ள சூரியகாந்தி உள்ளிட்ட மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில், 123-வது மலர் கண்காட்சி, துவங்கியதையடுத்து, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், கோத்தகிரி நேரு பூங்காவில் திரண்டனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சிறுவர், சிறுமியரின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்து பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.