மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுக்கு இரண்டரை லட்சம் வாழை மரங்கள் சேதம் : ஒரு வாரத்தில் மட்டும் 30 லட்சம் வாழை சேதமானதால் விவசாயிகள் கவலை

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையில் சிக்கி சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதுடன் குடியிருப்புகளும் சேதமானதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையில் சிக்கி சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதுடன் குடியிருப்புகளும் சேதமானதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.



மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட சிறுமுகை, பள்ளேபாளையம், பகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு நேந்திரன், ரோபஸ்டா, கதிலி, பூவன் என பலவிதமான வாழைகள் பயிரிடப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மேட்டுப்பாளையம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து லட்சக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் போது சூறாவளிக்காற்று பயங்கரமாக வீசியதில் குடியிருப்புகளின் மேற்கூரைகள் பெயர்த்தெரியப்பட்டதால், வீட்டினுள் இருந்தவர்கள் அச்சமடைந்து வெளியேறினர். அதோடு, சாலைகளின் ஓரத்தில் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன. 



மேலும், பள்ளேபாளையம், பட்டக்காரனூர், ஆனைப்பள்ளிப்புதூர், சென்னம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதனால், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வாழை ஒன்றிக்கும் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவு செய்து, அறுவடைக்கு இன்னும் ஒருமாதமே இருந்த நிலையில் புடை தள்ளி காய்த்து தொங்கிய வாழைகள் மண்ணில் சாய்ந்து கிடப்பது கண்டு விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த வாழைகளை சம்பந்தபட்ட அதிகாரிகளை கொண்டு உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றில் சிக்கி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதால், அரசு தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...