அவிநாசி அருகே சாலை விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் : அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் தனது மனைவி தமிழ் செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6) மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவிநாசி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்ற போது, அங்கு ரமேஷ் உயிரிழந்தார். மேலும், இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்ச் செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்ட வசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார். 

இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...