தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காத பிரிக்கால் நிறுவனம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காமல், பணிக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பிரிக்கால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காமல், பணிக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பிரிக்கால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக 302 பேர் இடமாற்றம் செய்து பொருள்கள் நிர்வாகம் உத்தரவிட்டது. ஒரு சிலரை தவிர 293 பேர் பணி மாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் தொழில் தகராறு ஏற்பட்டது. பின்னர், தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஊழியர்களை பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என பிரிக்கால் நிறுவனம் தெரிவித்ததாகவும், எனவே, 293 பேரின் பணியிட மாற்றல் உத்தரவு குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பணியிட மாற்றத்திற்கு 10பி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. 



இந்த நிலையில, அரசாணையை அவமதிக்கும் வகையில், இன்று பணிக்கு சென்றவர்களை உள்ளே அனுமதிக்காமல் பிரிக்கால் நிர்வாகம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...