சிங்காநல்லூர் அருகே மதுபோதையில் அம்மிக் கல்லை தலையில் போட்டு ஒருவர் கொலை : போலீசார் குற்றவாளிக்கு வலைவீச்சு

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள டாஸ்மார்க்கில் ஏற்பட்ட தகராறின் போது, அம்மிக் கல்லை போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள டாஸ்மார்க்கில் ஏற்பட்ட தகராறின் போது, அம்மிக் கல்லை போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிங்காநல்லூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் சுப்பன் (26). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க்கில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது, அவரது அருகே நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்ற சக்திவேலும் (27) மது அருந்திக் கொண்டிருந்தார். இருவரும் திடீரென மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வெளியில் வந்த சுப்பன், சக்திவேலின் குடும்ப உறுப்பினர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சக்திவேல் அருகே இருந்த அம்மிக்கல்லை கொண்டு சுப்பனை தாக்கியுள்ளார். இதில், தாக்குதலுக்கு உள்ளான சுப்பன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுப்பனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சுப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து, குற்றவாளியை பிடிக்க துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காசிப்பாண்டியன், அர்ஜுன், மற்றும் தலைமைக் காவலர் சுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...