கோவை : சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சர் எஸ் பி வேலுமணி. இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு, சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் வரும் பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலை விபத்தில் சிக்கியிருப்பதை கண்டார். உடனடியாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது பின்னால் வந்த வாகனத்தில் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனை நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்துப் பேசி உடனடியாக முதலுதவி செய்யுங்கள் என மருத்துவர்களிடம் பேசினார்.
இதனிடையே, சாலை விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். விபத்தில் சிக்கியவர் தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.