கோத்தகிரியில் பூச்சுக்கொல்லி மருந்தடித்த விதை கிழங்கை சாப்பட்ட குரங்குகள் கொத்து கொத்தாக மடிந்த சம்பவம் : பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி : கீழ்கோத்தகிரி பகுதியில் பூச்சுக்கொல்லி மருந்தடித்த விதை கிழங்குகளை உண்ட குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : கீழ்கோத்தகிரி பகுதியில் பூச்சுக்கொல்லி  மருந்தடித்த விதை கிழங்குகளை உண்ட குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும், குறிப்பாக குரங்குகள் காடுகளைவிட்டு வெளியேறி பல ஆண்டுகளாக சாலையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அளிக்கும் உணவுகளை தின்று வருகின்றன. மனிதர்கள் வழங்கும் உணவுக்காக கையேந்தி காத்துக் கிடக்கின்றன. மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. 

இந்த நிலையில், கோத்தகிரியை அடுத்துள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் 9 குரங்குகள் கூட்டமாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் சில தினங்களே ஆன, பால் குடிக்கும் குட்டிகளைத் தவிர, தாய் மற்றும் சினைக்குரங்குகள் இறந்து கிடந்ததை கண்டனர். பின்னர், உடனடியாக இறந்த குரங்குகளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் விதைக்கிழங்கு உள்ளிட்டவற்றில் பூச்சுக்கொல்லி மருந்தடித்து  வைத்திருந்த நிலையில்,  இவற்றை உண்ட குரங்குகள் இறந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...