நீலகிரி : கீழ்கோத்தகிரி பகுதியில் பூச்சுக்கொல்லி மருந்தடித்த விதை கிழங்குகளை உண்ட குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் யானை, கரடி, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும், குறிப்பாக குரங்குகள் காடுகளைவிட்டு வெளியேறி பல ஆண்டுகளாக சாலையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அளிக்கும் உணவுகளை தின்று வருகின்றன. மனிதர்கள் வழங்கும் உணவுக்காக கையேந்தி காத்துக் கிடக்கின்றன. மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், கோத்தகிரியை அடுத்துள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் 9 குரங்குகள் கூட்டமாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் சில தினங்களே ஆன, பால் குடிக்கும் குட்டிகளைத் தவிர, தாய் மற்றும் சினைக்குரங்குகள் இறந்து கிடந்ததை கண்டனர். பின்னர், உடனடியாக இறந்த குரங்குகளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் விதைக்கிழங்கு உள்ளிட்டவற்றில் பூச்சுக்கொல்லி மருந்தடித்து வைத்திருந்த நிலையில், இவற்றை உண்ட குரங்குகள் இறந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.