கோவை : நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்குதல் மற்றும் மரம் முறிந்து கிடந்ததை அப்புறப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி சாலை சுங்கம் அருகில் சாலையில் மரம் முறிந்து கிடந்ததை மாநகராட்சிப் பணியாளர்களால் உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளையும், அவினாசி மேம்பாலம் கீழ்பகுதியின் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அப்புறப்படுத்தப்படும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் விமலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.