சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைக்கு உற்பத்தியில் பாதி தொகையை இழப்பீடு வழங்கக் கோரி ஜூன் 5-ல் கோவையில் விவசாயிகள் பேரணி

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 5-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 5-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரதான விவசாயமாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேந்திரன்,ரோபஸ்டா, கதிலிம், சாம்பல் வாழை என பலவிதமான வாழைகள் உற்பத்தி செய்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறாவளிக்காற்று வீசியதன் காரணமாக சிறுமுகை, பகத்தூர், சம்பரவள்ளி உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதனால், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாழைக்கு ஜந்து ரூபாய் என்ற கணக்கில் நஷ்டஈடு வழங்க அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேணுகோபால் பேசியதாவது :- ஒரு வாழையை உற்பத்தி செய்ய நடவு பணியில் இருந்து 250 ரூபாய் வரை செலவு செய்வதாகும். ஆனால், தற்போது அதிகாரிகள் கொடுத்துள்ள நஷ்ட ஈடு அறிக்கையின்படி, 5 ரூபாய் என்பது முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறபடுத்த கூட முடியாது. மேலும், 4 வாழைக்கு 5 ரூபாய் என்பது விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆண்டுதோறும் இது போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் வனவிலங்குகள் தொல்லை காரணமாக, வாழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாழை விவசாயிகளுக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது, அதாவது 250 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 5 ஆம் தேதி கோவையில் பேரணி நடத்தப்படும், என அவர் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...