கோவை : கோவை - அவினாசி சாலை அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளத்கு.
கோவை : கோவை - அவினாசி சாலை அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளத்கு.
கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டு விட்டு, அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியது. பின்னர், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இரண்டு இளைஞரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் எழிலரசு மேற்பார்வையில் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது ஏற்கனவே சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் சதிஷ், ஹரி, தனபால் மற்றும் சூர்யா ஆகியோரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேருக்கு வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார்.